தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் திருநாவுக்கரசர் சந்திப்பு

தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் தமிழக காங். கமிட்டி முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் சந்தித்து பேசினார்.

தேர்தல் கூட்டணி பற்றி விஜயகாந்துடன் திருநாவுக்கரசர் பேசுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக கூட்டணியில் சேர்வதில் சிக்கல் நீடிப்பதால் காங்கிரசுடன் தேமுதிக பேச்சுவார்த்தை நடத்துகிறது.

அரசியல் குறித்து விவாதித்தோம், நாட்டு நலங்கருதி நல்ல முடிவு எடுப்பார் என திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.