தி.மு.க. குறித்த கமலின் விமர்சனம் அறியாமை : உதயநிதி ஸ்டாலின்..

தன்னைக் காப்பியடித்து தி.மு.க. கிராம சபை கூட்டம் நடத்துவதாக கமல்ஹாசன் கூறியிருப்பது அறியாமை என நடிகர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை வடபழனியில் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், கமலின் விமர்சனம் குறித்து செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு பதிலளித்த உதயநிதி, கமலின் விமர்சனம் அவரது அறியாமையை காட்டுகிறது என்றார்.

நீண்டகாலமாகவே தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கிராமங்களுக்கு செல்வதாக அவர் குறிப்பிட்டார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி சந்திப்பு..

புதுவை முதல்வர் நாராயணசாமி போராட்டத்திற்கு அரவிந் கெஜ்ரிவால் நேரில் ஆதரவு..

Recent Posts