திமுக முதன்மை செயலாளராக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டார்.
டி.ஆர்.பாலு நாடாளுமன்றக் குழுத்தலைவராக பொறுப்பு வகிப்பதால், அவருக்கு பதிலாக கே.என்.நேரு நியமனம் செய்யப்பட்டுள்ளதாக திமுக தெரிவித்துள்ளது.