கலைஞர் அனுமதிக்கப்பட்டிருக்கும் சென்னை ஆழ்வார்ப்பேட்டை காவேரி மருத்துவமனை முன்பு இரவு முழுவதும் விடிய, விடிய எழுந்துவா தலைவா என முழங்கியபடி திமுக தொண்டர்கள் காத்திருந்தனர்.
வெளியூர்களில் இருந்து வந்திருந்த தொண்டர்கள் நிற்கவோ, படுக்கவோ இடமின்றி கிடைத்த இடங்களில் அமர்ந்து கொண்டனர். சில தொண்டர்கள் அங்கப்பிரதட்சணம் செய்தனர். சிலர் கூட்டமாக சேர்ந்து தீபமேற்றி வழிபட்டனர். விடியும் வரை, எழுந்துவா தலைவா என்ற முழக்கம் மட்டும் நிற்கவில்லை. காலையில் சிறிது நேரம் கூட்டம் குறைந்தது. மீண்டும் தொண்டர்கள் கூட்டம் காவேரி மருத்துவமனை முன்பாக திர ளத் தொடங்கி உள்ளது. நேற்று (திங்கள்) மாலை 6.30 மணி அளவில் காவேரி மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், கலைஞரின் உடல்நலத்தின் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாகவும், 24 மணி நேரத்திற்குப் பின்னரே எதுவும் கூற முடியும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. பின்னர், இரவு 11.30 மணி அளவில் மீண்டும் மருத்துவமனை அறிக்கை வெளியிடப் போவதாக கூறப்பட்டது. ஆனால், அப்படி எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை. இன்று மாலை கலைஞரின் உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கையை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, மத்திய சாலைப்போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின்கட்கரி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் திங்கள் கிழமையும் நேரில் வந்து திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினிடம் நலம்விசாரித்து சென்றனர்.
DMK Cadres waiting with Sound of Slogan “Ezhunthuva Thalaiva”