முக்கிய செய்திகள்

தமிழகம் முழுவதும் ஜன-3 முதல் கிராமசபைக் கூட்டங்கள்: திமுக தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டத்திற்கு பின்னர் ஸ்டாலின் அறிவிப்பு

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில், நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி நாடாளுமன்றத் தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.

இதில் தேர்தல் பொறுப்பாளர்களுடன், மாவட்ட செயலாளர்கள், கட்சியின் எம்பி, எம்எல்ஏக்களும் கலந்து கொண்டனர்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வியூகங்கள், ஏற்பாடுகள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது. திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் பொறுப்பாளர்களுக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் முக்கிய ஆலோசனைகளை வழங்கினார்.

கூட்டத்தின் பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய ஸ்டாலின், மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்களுடைய மனங்களை வெல்வோம் என்ற முழக்கத்துடன், வரும் ஜனவரி-3ம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள 12,617 ஊராட்சிகளையும், அங்குள்ள மக்களையும் ஒருங்கிணைக்கும் பயணத்தை திமுக தொடங்கும் எனத் தெரிவித்தார்.

"மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம் "- திமுக தலைவர் ஸ்டாலின் புதிய வியூகம்

"மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம் "- திமுக தலைவர் ஸ்டாலின் புதிய வியூகம்மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்களுடைய மனங்களை வெல்வோம் என்ற முழக்கத்தோடு, வருகின்ற ஜனவரி-3ம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள 12,617 ஊராட்சிகளையும், அங்குள்ள மக்களையும் ஒருங்கிணைக்கும் பயணத்தை திமுக தொடங்கும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.DMK – Dravida Munnetra Kazhagam M. K. Stalin #kalaignarseithigal #kalaignarnews #DMK #திமுக #ஸ்டாலின்

Posted by Kalaignar Seithigal on Monday, 24 December 2018