திமுக ஆட்சிக்கு வந்தால் முழுமையாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே கந்தனேரியில் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ பிரச்சாரத்தில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும், திமுக ஆட்சியில் விவசாயக்கடன், கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.