முக்கிய செய்திகள்

திமுகவில் இரு பதவிகள் விவகாரம் : க.அன்பழகன் அறிக்கை


திமுகவில் இரட்டைப் பதவி வகிக்கும் நிர்வாகிகள் பதவி விலகி ராஜினாமா கடிதத்தை அளிக்கவேண்டும் என திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”திமுக நிர்வாகிகளுடன் திமுக செயல் தலைவர் நடத்திய கள ஆய்வில் பல நிர்வாகிகள் இரண்டு பதவிகளில் இருப்பது தெரிய வருகிறது.

ஆகவே இரு பதவி வகிக்கும் கட்சி நிர்வாகிகள் அவர்களாகவே தானாக முன்வந்து பதவி விலகி அவர்களது விலகல் கடிதத்தை மாவட்டச் செயலாளரிடம் அளிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.

பதவி விலகிய இடங்களுக்கு புதிய நிர்வாகிகளை நியமித்து மாவட்டச் செயலாளர்கள் புதிய நிர்வாகிகளை நியமித்து அதன் விவரங்களை மார்ச் 31க்குள் அளிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.”

இவ்வாறு அன்பழகன் தெரிவித்துள்ளார்.