முக்கிய செய்திகள்

திமுக.வில் குடும்ப ஆட்சி, அதிமுக.வில் தொண்டர்கள் ஆட்சி : முதல்வர் பழனிசாமி..

தமிழகத்தில் திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளிலும் வாரிசு அரசியல் தான் நடைபெற்று வருகிறது என்று முதலமைச்சர் பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள நல்வாழ்வு மண்டபத்தில் மாற்றுக்கட்சியை சேர்ந்தவர்கள் அதிமுக வில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் . அதிமுகவின் இணை ஒருங்கிணைபாளரும் தமிழக முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் தலைமை வகித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் திமுக, மதிமுக, அமமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சார்ந்த 1000 பேர் அதிமுகவில் இணைந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, மக்கள் பிரச்சனையை தீர்க்கக்கூடிய ஒரே கட்சி அதிமுக தான் என்றும்,

திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளிலும் வாரிசு அரசியல் தான் நடைபெற்று வருகிறது என்றும் கூறினார்.

மேலும், அதிமுகவில் மட்டும் தான் சாதாரண தொண்டன் கூட பதவிக்கு வர முடியும் என்று முதலமைச்சர் பழனிசாமி பெருமிதம் தெரிவித்தார்.