முக்கிய செய்திகள்

திமுக விவசாய அணி மாநில செயலாளர் பொறுப்பில் இருந்து கே.பி.ராமலிங்கம் நீக்கம்..

திமுக விவசாய அணி மாநில செயலாளர் பொறுப்பில் இருந்து கே.பி.ராமலிங்கம் நீக்கப்பட்டுள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க வீடியோ கான்பரன்ஸ் மூலம் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் அறிக்கை ஒன்றை வெளியிட்ட கே.பி.ராமலிங்கம், அனைத்துக்கட்சி கூட்டம் தேவையில்லாதது என்றும், 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை கூட்ட வேண்டும் என வலியுறுத்தக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.

அவரது அறிக்கை கட்சியில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், கட்சி பொறுப்பில் இருந்து கே.பி.ராமலிங்கத்தை நீக்கி மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.