முக்கிய செய்திகள்

ஆர்கே நகரில் மீண்டும் மருது கணேஷையே களமிறக்கிய திமுக!

 

ஆர்கேநகர் தொகுதியில் திமுக மருதுகணேஷையே மீண்டும் வேட்பாளராக அறிவி்த்துள்ளது.

ஆர்.கே.நகர் தேர்தலில் திமுக சார்பில் யாரை நிறுத்துவது என்பது குறித்த ஆலோசனைக் கூட்டம், கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ஆர்.கே.நகரில் கடந்த முறை போட்டியிட்ட மருதுகணேஷூக்கு மீண்டும் வாய்ப்பளிக்க முடிவு செய்யப்பட்டது.

இது தொடர்பாக செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த ஸ்டாலின், ஆர்.கே.நகரில் திமுக வேட்பாளராக மருதுகணேஷ் போட்டியிடுவார் எனத் தெரிவித்தார். மேலும், திமுகவுக்கு ஏற்கனவே உள்ள தோழமைக் கட்சிகள் ஆதரவளிக்க உறுதி அளித்திருக்கும் நிலையில், பிற கட்சிகளிடம் கோரிக்கை வைக்கப்படும் என்றும் ஸ்டாலின் கூறினார்.

இதனிடையே, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று ஆளும் கட்சிக்கு தக்க பாடம் புகட்டுவோம் என திமுக வேட்பாளர் மருதுகணேஷ் தெரிவித்துள்ளார்.

DMK Field Maruthu Ganesh in RK Nagar Again