தமிழகத்தில் திமுக கூட்டணி 34 இடங்களை கைப்பற்றும் : கருத்துக்கணிப்பு

தமிழகத்தில் திமுக கூட்டணி 34 இடங்களை கைப்பற்றும் என கருத்துக்கணிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக, திமுக தலைமையில் தமிழகத்தில் இரு மெகா கூட்டணிகள் இந்த முறை அமைந்துள்ளது. இந்த கூட்டணி போக கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், டிடிவி தினகரன் கட்சியும் தனியாக களமிறங்குகிறது.

பிற இதர கட்சிகளும் தனியாக போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத மிகவும் முக்கியமான தேர்தலாக இது உள்ளது.

அரசியல் கட்சிகள் வெற்றியை பெற தீவிரம் காட்டுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் திமுக கூட்டணி 34 இடங்களை கைப்பற்றும் என கருத்துக்கணிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.