திமுக தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது..


சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது

பேருந்து கட்டண உயர்வு தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

திமுக சார்பில் அனைத்துக் கட்சி கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது. திருநாவுக்கரசர்,வைகோ, ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.