முக்கிய செய்திகள்

விடைபெற்றார் கலைஞர்…!


காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கலைஞர் (95) மாலை 6.10 மணிக்கு காலமானார். இதனால் பதற்றமடைந்த தொண்டர்கள் கண்ணீரோடு காவிரி மருத்துவமனை முன்பும், கோபாலபுரம் இல்லம் அருகேயும் காத்துக் கொண்டிருக்கின்றனர் . கலைஞரது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து கடந்த 10 நாட்களாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதை அடுத்து, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சைகள் எதுவும் பலனளிக்காமல் மாலை 6.10 மணிக்கு இந்த தமிழ் மண்ணிடம் இருந்தும், மக்களிடமிருந்தும் கலைஞர் விடைபெற்றார்.