முக்கிய செய்திகள்

திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு : காவேரி மருத்துவமனை அறிக்கை..

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக காவேரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மருத்துவமனை நிர்வாகம் சார்பில் மாலை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நிலையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வயது மூப்பு காரணமாக அவரது உடல் உறுப்புகளை செயல்பட வைப்பது சவாலாக உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடல்நிலை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும். 24 மணிநேரக் கண்காணிப்பிற்குப் பின்னரே அவரது உடல் நிலையில் ஏற்படும் முன்னேற்றம் குறித்து கணிக்க முடியும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.