திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் பிரிட்டிஷ் துாதரக அதிகாரிகள் சந்திப்பு..

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று (18-01-2018) ஆழ்வார்பேட்டை இல்லத்தில்,

இந்தியாவிற்கான பிரிட்டிஷ் தூதரகத்தின் அரசியல் மற்றும் இருதரப்பு உறவுகளின் தலைவர் திரு ரிச்சர்ட் பர்லாவ் (Mr Richard Barlow),

இந்தியாவிற்கான பிரிட்டிஷ் துணை தூதர் திரு ஜெரிமி பில்மோர்-பெட்போர்டு (Mr Jeremy Pilmore-Bedford),

இலண்டனைச் சேர்ந்த வெளிநாடு மற்றும் காமன்வெல்த் நாடுகளின் தெற்காசிய அலுவலகத்தின் தலைவர் திரு பெர்கஸ் அல்ட் (Mr Fergus Auld) ஆகியோர் நேரில் சந்தித்து இந்தியா மற்றும் தமிழ் நாட்டின் சமூக – அரசியல் நிலவரம் குறித்து கலந்துரையாடினர்.

இச்சந்திப்பின் போது, திரு ரூடி பெர்னாண்டஸ் (Mr Rudy Fernandez) (தலைவர் – அரசியல், பொருளாதார மற்றும் பொது விவகாரத் துறை),

திமுக முதன்மைச் செயலாளர் திரு டி.ஆர்.பாலு, முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான திரு பொன்முடி, முன்னாள் மத்திய அமைச்சர் திரு ஆ.ராசா ஆகியோர் உடனிருந்தனர்.