முக்கிய செய்திகள்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் தொலைபேசியில் நலம் விசாரித்தார் : பிரதமர் மோடி

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் தொலைபேசியில் பிரதமர் மோடி நலம் விசாரித்தார். தாயார் தயாளு அம்மாளின் உடல்நலம் குறித்தும் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.

பிரதமர் மோடியின் உடல் நலம் குறித்தும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் ஸ்டாலினை தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்.

வரும் 8-ந்தேதி நடைபெறும் நாடாளுமன்ற அனைத்துகட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளார்.

அதன்படி திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர் பாலு கலந்து கொள்வார் என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.