திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு இடைக்கால ஜாமின்..

தனது பேச்சு தொடர்பான வழக்குகளுக்கு தடை கோரி, அவை சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டதால், அவர் இடைக்கால ஜாமின் வழங்கி விடுவிக்கப்பட்டுள்ளார்.இன்று காலை கைது செய்யப்பட்ட திமுக அமைப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி இடைக்கால ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

திமுக அமைப்பு செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி கைது இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார்.

ஆதித்தமிழர் மக்கள் கட்சித் தலைவர் கல்யாண்குமார் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை ஆலந்தூரில் உள்ள தனது வீட்டில் இன்று அதிகாலையில் கைது செய்யப்பட்டார்.

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆர்.பாரதியிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

நீதிபதிகள், பட்டிலின மக்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக வந்த புகார்களின் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதியப்பட்டுள்ள 2 வழக்குகளின், மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் தலைமையிலான போலீசார், ஆர்.எஸ் பாரதியை இன்று அதிகாலை கைது செய்தனர்.

தனது பேச்சு தொடர்பான வழக்குகளுக்கு தடை கோரி, அவை சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டதால், அவர் இடைக்கால ஜாமின் வழங்கி விடுவிக்கப்பட்டுள்ளார்.