முக்கிய செய்திகள்

சமூகத்தின் கண்களும், காதுகளும் பத்திரிகையாளர்கள் தான்: அன்பில் மகேஷ்

திமுகவில் அன்பில் தர்மலிங்கம், அன்பில் பொய்யாமொழி , அன்பில் மகேஷ் என கலைஞரின் குடும்பத்தைப் போவலே மூன்றாவது தலைமுறையாக தொடரும் பாரம்பரியம் அது. உதயநிதி ஸ்டாலினுடன் மிக நெருக்கமான நட்பு கொண்டவர் அன்பில் மகேஷ். அது இயல்பானதுதான் என்றாலும், மூன்றாவது தலைமுறையிலும் இரு அரசியல் குடும்பத்தின் உறவு ஆழமாக தொடர்வது அத்தனை எளிதானதல்லவே!

 

திமுகவின் துடிப்பு மிக்க இளைய தலைமுறைத் தலைவர்களில் ஒருவரான அன்பில் மகேஷ், “தமது திருவெறும்பூர் தொகுதியில் உள்ள பத்திரிகையாளர்கள் அனைவரையும் சந்தித்து தொகுதிப் பிரச்சினைகள் குறித்து அளவளாவி உள்ளார். அதன் நிழற்படத்தை தமது ட்விட்டரில் வெளியிட்டுள்ள மகேஷ், சமூகத்தின் கண்களும், காதுகளும் பத்திரிகையாளர்கள் தான் என்பதால், அவர்களுடன் நெருக்கமாக இருப்பதைக் கௌரவமாக கருதுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். பத்திரிகையாளர்களைப் போலவே, மக்களைக் கவனிக்கும் கண்களும், அவர்களது குறைகளைக் கேட்கும் காதுகளும், மக்கள் பிரநிதியான அன்பில் மகேஷூக்கு உள்ளது என்பது இதன் மூலம் புரிகிறது…  

DMK MLA Anbil Mahesh met journalists and reporters from his constituency