முக்கிய செய்திகள்

திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி

தி.மு.க., எம்.எல்.ஏ., ஜெ.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் முதன்முறையாக எம்.எல்.ஏ., ஒருவருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. சென்னை, சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி, திமுக எம்.எல்.ஏ., ஜெ.அன்பழகனுக்கு(61) கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.

இதனையடுத்து அவர், குரோம்பேட்டையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஊரடங்கு காலத்தில் அவர் பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.