முக்கிய செய்திகள்

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பொள்ளாச்சி விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்படும் : ஸ்டாலின்

திமுக ஆட்சி வந்தவுடன் ஜெயலலிதா மரணம், கோடநாடு கொலை வழக்கு, பொள்ளாச்சி பாலியல் வன்முறை தொடர்பான சம்பவங்களில் உரிய விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தருமபுரி மாவட்டம் நடுப்பட்டியில் தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர், ஆளும் கட்சியின் தலையீடு உள்ளதால் பொள்ளாச்சி விவகாரத்தில் காவல்துறையும் உளவுத்துறையும் கண்டுகொள்ளாமல் இருப்பதாக குற்றம்சாட்டினார்.

8 வழிச்சாலை விவகாரத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியது தான் அ.தி.மு.க – பா.ம.க கூட்டணியின் முரண்பாடு என தெரிவித்தார்.