முக்கிய செய்திகள்

தி.மு.க., மண்டல மாநாடு ஈரோட்டில் தொடங்கியது..


ஈரோடு, பெருந்துறையில் இன்று(மார்ச் 24) தி.மு.க., மண்டல மாநாடு தொடங்கியது.

பெருந்துறை அருகே, சரளை பகுதியில், தி.மு.க., சார்பில், இன்றும், நாளையும் மண்டல மாநாடு நடக்கிறது. செயல் தலைவராக, ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் நடக்கும் முதல் மாநாடு இது. மாநாட்டுக்காக, 1.50 லட்சம் சதுர அடி பந்தல், ஒரு லட்சம் நாற்காலிகள், கோட்டை போன்ற முகப்பு தோற்றம், புகைப்பட கண்காட்சி அரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஸ்டாலின் தலைமையில், 100 ஜோடிகளுக்கு இலவச சுயமரியாதை திருமணம் நடத்தி வைக்கப் படுகிறது.