திமுக பேரணிக்கு உயர் நீதிமன்றம் தடைவிதிக்க மறுப்பு..

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து சென்னையில் நாளை பேரணி நடத்தப்போவதாக திமுக அதன் கூட்டணி கட்சிகள் அழைப்பு விடுத்திருந்தன.

இந் த பேரணிக்கு தடை விதிக்க வலியுறுத்தி உயர்நீதிமன்றத்தில் அவசர மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதிகள் வைத்தியநாதன், ஆஷா சிறப்பு அமர்வு முன் இரவு 8 மணியளவில் உயர்நீதிமன்ற நீதிபதி இல்லத்தில் வைத்து விசாரணை நடைபெற்றது.
விசாரணைக்குப் பிறகு திமுக கூட்டணி கட்சிகள் நடத்தும் பேரணிக்கு தடை விதிக்க மறுத்துவிட்டனர்.
மேலும் இந்த பேரணி குறித்து 4 வாரத்தில் பதிலளிக்க திமுகவிற்கு உத்தரவிட்டனர்.
உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் படி நடக்கிறதா என்பதை கண்காணிக்க வீடியோ பதிவு செய்ய உத்தரவிட்டனர்.
பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தால் இருமடங்காக வசூலிக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.