திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் நேற்று இரவு உடல் நலக்குறைவால் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார்.தற்பொது உடல்நலம் தேறி நலமுடன் இருப்பதாக மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்
கழக பொதுச்செயலாளர் பேராசிரியர் அவர்கள் நேற்றிரவு(20.10.2018) காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதால் உடல் நலம் தேறி நலமுடன் இருக்கிறார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இரண்டொரு நாட்களில் உடல் நலம் தேறி இல்லம் திரும்ப இருப்பதால் கழக நிர்வாகிகள்- தோழர்கள் எவரும் நேரில் வரவேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
எனத் தெரிவித்துள்ளார்.