திமுகவிலிருந்து சட்டமன்ற உறுப்பினர் கு.க. செல்வம் இடைநீக்கம்..

திமுகவிலிருந்து சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கு.க. செல்வம் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக திமுக தலைவர் மு.கஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கு.க. செல்வம் கட்சிக்கு எதிராக செயல்பட்டதால் அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

கு.க. செல்வம் பாஜகவில் இணைய டெல்லி வரை சென்றார். பாஜகவில் இணையாமல் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு சில கோரிக்கை வைத்தார்.

இதனையடுத்து திமுகவின் தலைமை கெழகச் செயலாளர்,செயற்கழு உறுப்பினர் பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். கட்சியிலிருந்தும் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.