முக்கிய செய்திகள்

திமுகவின் வெற்றியை தமிழக உரிமைகளுக்காக பயன்படுத்துவோம் : கனிமொழி

திமுகவுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியை, தமிழகத்தின் உரிமைகளுக்காக பயன்படுத்துவோம் என தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கனிமொழி தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய அவருக்கு திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, தூத்துக்குடி மக்களின் குரலாக தன்னால் முடிந்த அளவுக்கு நாடாளுமன்றத்தில் பணியாற்றுவேன் என தெரிவித்தார்.