முக்கிய செய்திகள்

தவறவிடாதீர்…: வேலைவாய்ப்பு அலுவலகங்களில் விடுபட்ட பதிவுமூப்பை புதுப்பிக்க வருகிற 24ந் தேதி வரை அவகாசம்..

வேலைவாய்ப்பு அலுவலகங்களில் விடுபட்ட பதிவுமூப்பை புதுப்பிக்க வருகிற 24ந் தேதி வரை அவகாசம் இருப்பதாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தெரிவித்துள்ளது.

பதிவுதாரரின் நலனை கருத்தில் கொண்டு 2011 முதல் 2016ம் ஆண்டு வரை 6 ஆண்டுகளுக்கு புதுப்பித்துக் கொள்ள தமிழக அரசு சலுகை அளித்துள்ளது.

இதனைப் பயன்படுத்தி 77 ஆயிரம் பேர் விடுபட்டுப் போன தங்கள் பதிவை புதுப்பித்துள்ளனர்.

இதற்கான காலஅவகாசம் 24ந் தேதி நிறைவடைவதால் அதற்குள் பதிவுமூப்பை புதுப்பிக்குமாறு வேலைவாய்ப்பு பயிற்சித்துறை ஆணையர் ஜோதிநிர்மலா சாமி குறிப்பிட்டுள்ளார்.