முக்கிய செய்திகள்

பொறியியல் கலந்தாய்வுக்காக சென்னைக்கு வரவேண்டாம்: அமைச்சர்

பொறியியல் கலந்தாய்வுகளில் பங்கேற்க மாணவ, மாணவிகள் சென்னைக்கு வரவேண்டிய அவசியமில்லை என்றும் இணையத்திலேயே  விண்ணப்பித்துக்கொள்ளலாம் என்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கலந்தாய்வுக்காக தமிழகம் முழுவதும் 44 சிறப்பு மையங்கள் அமைக்கப்படும் என்றும் கூறினார். இந்த ஆண்டு வீடுகளில் இருந்த படியே இணையதளத்தின் மூலமாக கலந்தாய்வில் பங்கேற்கலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. வீட்டில் அதற்கான வசதி இல்லாதவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க வசதியாக பெரிய மாவட்டங்களில் இரண்டு மையங்களும், சிறிய மாவட்டங்களில் ஒரு மையமும் அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பொறியியல் கலந்தாய்வுக்கு யாரும் சென்னைக்கு வரவேண்டாம் என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

don’t come to Chennai for BE counseling