முக்கிய செய்திகள்

மலேசிய பிரதமராக டாக்டர் மகாதீர் முகமது பொறுப்பேற்பு..


மலேசியாவின் 14-வது பொதுத்தேர்தலில், பிரதான எதிர்கட்சி தலைவரும், முன்னாள் பிரதமருமான மகாதிர் முகமது தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதன் மூலம் தேசிய கூட்டணியின் 61 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்தது. இந்நிலையில் மலேசிய பிரதமராக 92 வயதான மகாதீர் முகமது பொறுப்பேற்றார். இதன் மூலம் உலகின் வயதான பிரதமர் எனும் பெயர் பெற்றார்.