ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 26 ஆம் தேதி போதைப்பொருள் சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினமாக கொண்டாடப்படுகிறது .
அதன் ஒரு நிகழ்வாக காரைக்குடி குளோபல் மிஷின் மருத்துவமனை போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மிகப்பெரிய அளவில் சிவகங்கை மாவட்ட மக்களுக்கு கொண்டு சேர்க்கும் விதமாக தமிழ்நாடு காவல்துறை, அழகப்பா பல்கலைக்கழகம் காரைக்குடி ரோட்டரி சங்கம் 6x விளையாட்டு சங்கம் போன்றவர்களுடன் இணைந்து கடந்த 26 ஆம் தேதி சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போதைப்பொருள்ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சார வாகனம் தொடங்கி வைக்கப்பட்டு மாவட்ட முழுவதும் கிட்டத்தட்ட 1000 கிலோ மீட்டர் அளவிற்கு சுற்றி வந்தது.
போதைப்பொருள்ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சார வாகனம் செல்லும் வழியெங்கும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என -25000 பேருக்கு மேல் கையொழுத்தை பெற்றது.
போதைப்பொருள்ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சார வாகனம் நிறைவாக 10 ஆம் தேதி காலை 9.30 மணியவில் காரைக்குடி அழகப்பா பல்கலைகழக வளாகம் முன்பு மாணவர்கள் விழிப்புணர்வு ஜோதியை ஏந்தி சிறு ஒட்டமாகஆரம்பித்து அழகப்பா உடற்கல்வியியல் கல்லூரி மைதானத்திற்கு சென்றனர்.
ஜோதியை குளோபல் மிசின் மருத்துவமனை சேர்மன் டாக்டர் குமரேசன் பெற்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் அவர்களிடம் கொடுக்க அவர் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு தீபத்தை ஏற்றி போதை பொருள் ஒழிப்பு உறுதிமொழியை வாசித்தார்.
அவர்களுடன் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் ஏராளமானோர் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் அவர்கள் ,அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ரவி அவர்கள், ADSP பிராசிஸ், காரைக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் அவர்கள் மற்றும் காரைக்குடி ரோட்டரி சங்கத் தலைவர் லட்சுமணன், அழகப்பா கலை கல்லூரி முதல்வர், அழகப்பா உடற் கல்வியில் கல்லூரி முதல்வர் ஆகியோர் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியை சமூக ஆர்வலர் இஸ்மாயில் தொகுத்து வழங்கினார்.
நிகழ்ச்சியின் அரசு பள்ளி மாணவ மாணவியர்கள் பிரமீட் அக்கடமியை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி யைடைம்ஸ் ஹல்த்கேர் பவுண்டு டேசன் மற்றும் சாரிட்டபில் டிரஸ்ட் ஒருங்கிணைத்தது.
செய்தி & படங்கள்
சிங்தேவ்