பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு : வில்லியம் நார்தாஸ், பால் ரோமர் தேர்வு…

வில்லியம் நார்தாஸ் மற்றும் பால் எம் ரோமர் ஆகியோருக்கு பொருளாதாரத்திற்கான 2018ம் ஆண்டின் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் மிகவும் மதிப்புமிக்க விருதாக பெயர் பெற்றுள்ள நோபல் பரிசு அறிவியல் மற்றூம் உலக அமைதி தொடர்பான துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு வழங்கப்படுகிறது.

மறைந்த வேதியியல் அறிஞர் ஆல்பிரட் நோபெல் நினைவாக 1895ம் ஆண்டு முதல் இந்தப் பரிசு அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டுகிறது.

ஸ்வீடன் அகெடமி, ரோயல் சுவீடிய அறிவியல் கழகம், கரொலீன்ஸ்கா கல்விநிலையம், நோர்வே நோபல் குழு ஆகியவை இணைந்து இந்தப் பரிசை ஆண்டுதோறும் அறிவித்து வருகின்றன.

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு கடந்த 1ம் தேதி முதல் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், முதலாவதாக மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டன. அதனை தொடர்ந்து இயற்பியல் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில் இன்று 2018ம் ஆண்டுக்கான பொருளாதார துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இது வில்லியம் நார்தாஸ் மற்றும் பால் எம் ரோமர் ஆகிய பொருளாதார நிபுணர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

அமெரிக்காவை சேர்ந்த வில்லியம் நாதர்ஸ், ’யேல் பல்கலைக்கழகத்தில்’ சுற்றுச்சூழல் பொருளாதார துறையில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

இவர் அதிகரித்து வரும் மக்கள் தொகையும், அதனால் ஏற்படும் பொருளாதார மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்திருந்தார்.

அமெரிக்காவில் பிரபல பொருளாதார நிபுணராக இருந்து வரும் பால் எம். ரோமர், ’நியூ யார்க் பல்கலைக்கழகத்தில்’ பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

இவர் நீண்ட கால அடிப்படையிலான பொருளாதாரத்துக்கு உதவும் தொழில்நுட்ப கண்டிபிடிப்புகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்திருந்தார்.

இந்த இரண்டு ஆய்வுகளின் அடிப்படையில் சுவீடன் அக்காதமி வில்லியம் நாதர்ஸ் மற்றும் பால் எம். ரோமருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை அறிவித்துள்ளது. இந்த துறைக்கான பரிசு தொகை இந்திய மதிப்பில் ரூ. 7.5 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 70 ஆண்டுகளில் முதல் முறையாக இலக்கியத்துக்கான நோபல் பரிசு இந்த ஆண்டு வழங்கப்படவில்லை. ஸ்வீடிஷ் அகாடமியின் தேர்வுக்குழு உறுப்பினர் காத்தீரனா பிராஸ்டென்சனின் கணவர் ஜீன் கிளாட் அர்னால்ட் மீது பாலியல் புகார் எழுந்ததால், இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படாது என கடந்த மே மாதம் அறிவிப்பு வெளியானது.

முன்னதாக, 1949ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இனிமையான கவிதையைப் போன்ற திரைக்காவியம் ’96’: திருச்சி சிவா புகழாரம்..

நித்யானந்தாவுக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் : நடிகை கஸ்தூரி நக்கல் டிவிட் ..

Recent Posts