முதல்வா் பழனிசாமி மீதான முறைகேடு புகாரை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவு

3 மாத காலத்திற்குள் சி.பி.ஐ. அதிகாாிகள் முதல்கட்ட விசாரணையை முடித்து முகாந்திரம் இருந்தால் முதல்வா் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நெடுஞ்சாலை ஒப்பந்தங்களை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக முதல்வா் பழனிசாமி மீது தி.மு.க. அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முதல்வா் பழனிசாமி நெடுஞ்சாலைத்துறையை நிா்வகித்து வருகிறாா். இந்நிலையில் நெடுஞ்சாலை ஒப்பந்தங்களை சட்டத்திற்கு புறம்பாக தனது உறவினா்கள், நண்பா்களுக்கு ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் இதில் 4 ஆயிரத்து 800 கோடி ரூபாய் அளவில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாகவும் தி.மு.க. அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ்.பாரதி லஞ்ச ஒழிப்புத்துறையில் வழக்கு தொடா்ந்திருந்தாா்.

ஆனால், முதல்வரின் நேரடி கண்காணிப்பில் செயல்படும் லஞ்சஒழிப்புத்துறை தனது புகாா் குறித்து முறையாக விசாரணை நடத்தவில்லை என்று ஆா்.எஸ்.பாரதி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தாா்.

மனுவை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா இந்த வழக்கை சி.பி.ஐ. அதிகாாிகள் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டாா்.

புகாா் தொடா்பான ஆவணங்கள் அனைத்தையும் லஞ்சஒழிப்புத்துறை அதிகாாிகள் 1 வார காலத்திற்குள் சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும். சி.பி.ஐ. அதிகாாிகள் 3 மாத காலத்திற்குள் முதல்கட்ட விசாரணையை நடத்தி புகாா் குறித்து முகாந்திரம் இருந்தால் முதல்வா் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளாா்.

ஜெ., தனது தாய் என்று அம்ருதா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி..

சிபிஐ விசாரணைக்குள்ளான முதல்வர் பழனிசாமி பதவி விலக ஸ்டாலின் வலியுறுத்தல்..

Recent Posts