
நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு தொடர்பாக அதிமுக தற்காலிக பொதுச் செயலாளரும்,எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி மீது லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையர் மேல் நடவடிக்கை எடுக்க தடை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நெடுஞ்சாலைத்துறை டெண்டரில் ரூ.4800 கோடி அளவுக்கு முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.