தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் தயார் நேற்று நள்ளிரவு உடல்நலக் குறைவால் காலமானார். அவரின் மறைவுக்கு தமிழக தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தனர்.
திமுக தலைவர் ஸ்டாலினின் இரங்கல் செய்தி
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் எடப்பாடி திரு. கே. பழனிசாமி அவர்களின் தாயார் தவசாயி அம்மாள் அவர்கள் தனது 93-ஆவது வயதில் மறைவெய்தினார் என்ற துயரச் செய்தி கேட்டு மிகுந்த மனவேதனைக்கு உள்ளானேன். அவரது மறைவிற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புமிக்க அன்னையை இழந்து வாடும் முதலமைச்சர் அவர்களுக்கும், குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புமிக்க அன்னையை இழந்து வாடும் @CMOTamilNadu, குடும்பத்தினர்க்கு எனது ஆழ்ந்த அனுதாபமும் ஆறுதல்களும்!
இது போல் தமிழக ஆளுநர்,துணை முதல்வர், வைகோ,திருமாவளவன், உட்பட பல தலைவர்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.