கஜா புயல் பாதிப்புகளை ரயிலில் சென்று பார்வையிடும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரயில் மூலம் சென்று பார்வையிடுகிறார்.

கஜா புயல் பாதிப்புகளை பார்வையிடுவதற்காக கடந்த 20-ஆம் தேதி விமானம் மூலம் திருச்சி சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை உள்ளிட்ட இடங்களை பர்வையிட்டார்.

இதனைத்தொடர்ந்து வானிலை சரியில்லாதால் அவர் திரும்பினார். விடுபட்ட மாவட்டங்களை விரைவில் பார்வையிட இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்து வரும் மத்தியக் குழு செவ்வாய்க்கிழமை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை செய்யவுள்ளதாகக் கூறப்படுகிறது.

அதனைத்தொடர்ந்து செவ்வாய்க்கிழமை இரவு காரைக்கால் விரைவு ரயில் மூலம் நாகை செல்லும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, புதன் கிழமை முதல் புயலால் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களை நேரில் பார்வையிடுகிறார்.