தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குற்றப்பின்னணி விவரங்களை மூன்று முறை விளம்பரப்படுத்த வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் சட்டசபை மற்றும் மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் பலர் குற்றப்பின்னணி உடையவர்கள். அவ்வாறு உள்ளவர்களை தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக் கூடாது என்ற கருத்து நிலவி வருகிறது.
இதுகுறித்து நீதிமன்றத்திலும் பலமுறை முறையிடப்பட்டுள்ளது. இந்நிலையில் வேட்பாளர்கள் குற்றப்பின்னணி விவரங்களை மூன்று முறை விளம்பரப்படுத்த வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள நெறிமுறைகளில் ‘‘வேட்பாளர்கள் குற்றப்பின்னணி விவரங்களை கட்சிகள் மூன்று முறை விளம்பரப்படுத்த வேண்டும்.
வேட்புமனுவை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாளிற்கு முன் குறிப்பிட்ட கால இடைவெளியில் நாளிதழ் அல்லது ஊடகங்களில் வெளியிட வேண்டும்’’ எனத் தெரிவித்துள்ளது.