தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக திமுக அதிருப்தி..

உயர் பதவில் இருக்கக்கூடிய ஐஏஎஸ் மற்றும் போலீஸ் அதிகாரிகள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதை தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும் என்று ஆர் எஸ் பாரதி வலியுறுத்தியுள்ளார்.

நேற்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, இந்திய தேர்தல் ஆணையருக்கு எழுதிய கடிதத்தில், எதிர்க்கட்சிகள் மீது வருமான வரித்துறை மற்றும் அரசு இயந்திரங்களை கொண்டு சோதனை நடத்துவது, அச்சுறுத்துவது,

இதையேல்லாம் பார்க்கும் போது, தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறதோ என்று தோன்றுகிறது. அதுமட்டுமல்லாமல் தேர்தல் நியாயமாகவும் நேர்மையாகவும் நடக்காது என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.

தமிழக காவல்துறை தலைவர் டி.கே.ராஜேந்திரன் மற்றும் உளவுத்துறை ஐஜி சத்தியமூர்த்தி ஆகியோரின் வழிநடத்துதலின்படி போலீஸ் வாகனங்களில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக ஆளும் கட்சியினுடைய பணம் கடத்தப்படுகிறது.

அது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. எனவே இந்தப் போலீஸ் அதிகாரிகள் தாமதமின்றி உடனடியாக மாற்றம் செய்யப்பட வேண்டும் .

உயர் பதவில் இருக்கக்கூடிய ஐஏஎஸ் மற்றும் போலீஸ் அதிகாரிகள் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதை தேர்தல் ஆணையம் தடுக்காவிட்டால் ஜனநாயகத்தின் தோல்விக்கு வழிவகுக்கும். அதிகாரிகள் ஆளுங்கட்சிக்கு துணை போவது மிகுந்த வேதனை அளிக்கிறது.

திராவிட கழகத்தினர் மீது இந்து முன்னணியினர் தாக்குதல் நடத்தியது தவறு : டிடிவி தினகரன்

லயோலா கல்லூரி நடத்திய தேர்தல் கருத்துக்கணிப்பில் திமுக முன்னிலை..

Recent Posts