தேர்தல் ஆணையராக சுசில் சந்திரா நியமனம்…

மத்திய நேரடி வரிகள் ஆணையத்தின் தலைவரான சுசில் சந்திரா, தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையராக சுனில் அரோராவும், தேர்தல் ஆணையராக அசோக் லாவேசாவும் உள்ளனர்.

மூன்றாவது ஆணையர் பதவி கடந்த டிசம்பர் மாதம் முதல் காலியாக இருந்த நிலையில் . அந்த பதவிக்கு சுசில் சந்திரா நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் பொறுப்பு ஏற்கும் நாளில் இருந்து ஆறு ஆண்டுகள் அல்லது 65 வயது வரை இந்த பதவியில் நீடிப்பார் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் ஆணையத்தின் பணி அதிகரித்துள்ளதால், காலி பணியிடம் நிரப்பப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள சுசில் சந்திரா 1980 ஆம் ஆண்டு இந்திய வருவாய் துறை பணியில் சேர்ந்தார்.

மத்திய நேரடி வரிகள் ஆணையத்தின் தலைவராக படிப்படியாக பதவி உயர்வு பெற்ற நிலையில் இப்போது தேர்தல் ஆணையராகி உள்ளார்.