இந்திய தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான முக்கிய சட்டத்திருத்ததை இன்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறது
உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு இணையாக தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர் பதவிகளைத் தக்கவைக்க மசோதாவில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
தேர்தல் ஆணைய நியமனத்தில் நீதிமன்றங்களின் தலையீடுக்கு இதன் மூலம் கிட்டதட்ட முடிவுக்கட்டப்படும் எனத் தெரிகிறது.
சமீபத்திய உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் குழுவில் 1) பிரதமர் 2) எதிர்க்கட்சித் தலைவர் 3) இந்திய தலைமை நீதிபதி ஆகியோர் இருக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கியிருந்தது புதிய சட்டத் திருத்ததின் படி, குழுவில் இருப்பவர்கள், 1) பிரதமர் 2) எதிர்க்கட்சித் தலைவர், மக்களவை 3) பிரதமரால் பரிந்துரைக்கப்பட்ட மத்திய அமைச்சரவை அமைச்சர் (தலைமை நீதிபதிக்கு பதிலாக) அதாவது மொத்தம் உள்ள மூன்று ஓட்டில் பிரதமருக்கு மட்டும் இரண்டு ஓட்டு