முக்கிய செய்திகள்

தேர்தல் டிஜிபி அசுதோஷ் சுக்லாவிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை..

குட்கா முறைகேடு வழக்கில், தமிழக தேர்தல் டிஜிபியான அசுதோஷ் சுக்லாவிடம் சிபிஐ விசாரணை நடத்திய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

குட்கா முறைகேடு நடந்த கால கட்டத்தில், 2016 ஆம் ஆண்டு சென்னை மாநகர தேர்தல் காவல் ஆணையராக இருந்தவர் அசுதோஷ் சுக்லா.

பதவி வகித்த போது, குட்கா ஆலை உரிமையாளர்களிடம் இருந்து லஞ்சம் பெற்றதாக அசுதோஷ் சுக்லாவின் பெயரும் மாதவராவின் டைரியில் குறிப்பிடப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

இதன் அடிப்படையில் அவரிடம் விசாரணை நடத்த சிபிஐ கடந்த மாதம் சம்மன் அனுப்பி இருந்தது.

ஆனால் அவர் ஆஜராகவில்லை. சட்டரீதியான நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து கடந்த 8ஆம் தேதி அன்று சென்னையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் அவர் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். இந்த தகவலை டெல்லி சிபிஐ வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.