முக்கிய செய்திகள்

தேர்தல் முறை மாறவேண்டிய தருணம் வந்து விட்டது…


இந்தியத் தேர்தல் முறை பிரிட்டிஷ் தேர்தல் முறையைப் பின்பற்றியது. 1952 முதல் இந்த தேர்தல் முறை படிப்படியாக வீழ்ச்சியடைந்து வருவது மறுக்கமுடியாத உண்மை. இன்றைய தேர்தல் முறையால் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வாக்கு பெறும் முறையே அசுர வளர்ச்சியடைந்துவருகிறது. மேலும் பணக்காரர்கள்,கிரிமினல் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாகையும் சூடுகின்றனர்.

மக்களின் வறுமையையும்,ஏழ்மையும் பயன்படுத்தி அரசியல் செய்து ஆட்சி அதிகாரத்தை பெறும் அரசியல் கட்சிகள் பெரும்பாலும் கார்பரேட் கம்பெனிகளின் ஏஜென்டாக மாறிவிட்டன.

தற்போதைய தேர்தல் நடைமுறை பற்றி ஆராய்வோம்.

தேர்தலில் பெரும்பாலும் 60 முதல் 75 சதவிகித வாக்குகள் வரைதான் பதிவாகி வருகின்றன. கிட்டதட்ட 25 முதல் 30 சதவிகித வாக்காளர்கள் வாக்களிக்காமல் புறக்கின்றனர். இவர்கள் ஏன் புறக்கணித்தார்கள். இவர்களின் எண்ணங்கள் என்ன என்பதை யாரும் ஆராய்வதில்லை.

75 சதவிகித வாக்குகளில் 31 சதவிகித வாக்குகள் பெறும் கட்சி வேட்பாளர் வெற்றி பெறுகிறார். 29 சதவிகித வாக்கு பெற்ற வேட்பாளர் தோல்வியை தழுவி இரண்டாம் இடத்திற்கு தள்ளப்படுகிறார்.

10 மற்றும் 4 சதவிகித வாக்குகள் பெற்ற வேட்பாளர்கள் டெபாசிட் தொகையை இழக்கிறார்கள்.

80 சதவிகித வாக்காளர்களால் புறக்கணித்த வேட்பாளர் 20 சதவிகித வாக்குகளால் வெற்றி பெறுகிறார். இந்திய தேர்தல் இப்படித்தான் நடைபெறுகிறது..

29 சதவிகிம் பெற்ற எதிர்கட்சி,10 மற்றும் 4 சதவிகித வாக்குகள் பெற்ற கட்சிகளின் கோரிக்கை எடுபடாமல் போய்விடுகிறது. கிட்டதட்ட 80 சதவிகித மக்களின் உணர்வு புறந்தள்ளப்படுகிறது.

இந்திய தேர்தல் முறை செயல் இழந்து வருகிறது. இந்த நேரத்தில் ஜெர்மனியில் உள்ளது போல் விகிதாச்சார அடிப்படையில் தேர்தல் நடைபெற்றால் சாதாரண மனிதர்களின் கோரிக்கைகள் நாடாளுமன்ற சட்டப்பேரவைக்கு எடுத்துச்செல்ல முடியும்.

தேர்தல் முறை மாறவேண்டிய தருணம் வந்து விட்டது.

ராஜஇந்திரன்,