காரோனா பாதிப்பால் ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் நிலையில் மின் கட்டணம் கட்ட அதிகளவில் மக்கள் கூடுவதால் சமூக இடைவெளியில்லாமல் போவதால் மின் கட்டணம் செலுத்துவதற்கு தடைவிதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நலவழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது மின் கட்டணம் வசூலிக்க இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.
மின் கட்டணம் செலுத்த கடைசி தேதி நாளை அதாவது மே-6 ந்தேதி என்பது குறிப்பிடத்தக்கது.
வரும் மே.18-ந்தேதிக்குள் மின்சார வாரியம் பதிலளிக்க உத்தவிட்டுள்ளது
