உற்சாகத் தொடர்…’தகுதியற்றவர்களிடம்…!: சொக்கலிங்கம் அருணாசலம்…

உற்சாகத் தொடர்…’தகுதியற்றவர்களிடம்…! சொக்கலிங்கம் அருணாசலம்
…………………………………………
வாழ்வில் பல சூழ்நிலைகளில், மற்றவர்களை விட நாம் திறமையானவர்கள், சிறந்தவர்கள் என்பதை எல்லோருக்கும் நிரூபிக்க முயற்சி செய்ய வேண்டிய அவசியமில்லை…
அப்படிச் செய்வது நமக்குத் தான் கால, பொருள், ஆற்றல் விரயமாகும்…!
சில நாய்களுக்கும், ஒரு சிறுத்தைக்கும் இடையில் எந்த விலங்கு வேகமாக ஓடுகிறது என்று ஒரு போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது…!
வானை நோக்கி துப்பாக்கி சுடப்பட்டு போட்டி ஆரம்பம் ஆனது….
நாய்கள் ஓட ஆரம்பித்தன…
ஆனால் சிறுத்தை தன் கூண்டை விட்டு வெளியே வரவே இல்லை.
போட்டியை காணக் கூடியிருந்த அனைத்து மக்களுக்கும் தாள முடியாத வேடிக்கை….
‘என்ன நடந்தது…?’ ‘ஏன் சிறுத்தை ஓடவில்லை…?’ என்று போட்டி ஒருங்கிணைப்பாளரிடம் கேட்டார்கள்…!
அதற்கு அவர் கூறிய விடை…
சிறுத்தை அதன் வேகத்தை வேட்டையாடுவதற்கு மட்டுமே பயன்படுத்தும். அதன் வேகத்தையும், வலிமையையும் சில நாய்களுக்கு நிரூபிக்க வேண்டியது இல்லை…
சில நேரங்களில் நாம் மற்றவர்களை விட சிறந்தவர் என்பதை மற்றவர்களுக்கு நிரூபிப்பது கூட ஒரு வகையில் அவமானம் தான்…!
தேவையில்லாதவர்களிடம், தகுதியற்றவர்களிடம், நாம் யார் என்பதை நிரூபிக்காமல் இருப்பதே சிறந்த, தேர்ந்த அறிவாகும்…!!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: அதிமுக ஓபிஎஸ் அணி வேட்பாளார் வாபஸ்..

2ம் கட்ட புதுமைப்பெண் திட்டம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்…

Recent Posts