பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு..

மாணவர் தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

B.E / B.Tech படிக்கக் கூடிய மாணவர்களுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மே இரண்டாம் தேதி துவங்கி வரும் மே 31-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இவர்களுக்கான கலந்தாய்வு ஜூன் 20ஆம் தேதி துவங்க உள்ள நிலையில் அண்ணா பல்கலைகழகத்தின் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டு அக்கல்லூரிகளின் மாணவர் தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் இந்த தர வரிசை பட்டியலை அண்ணா பல்கலைகழகம் வெளியிடப்பட்டுள்ளது.

இவற்றைக் கொண்டு கல்லூரிகளில் கற்பிக்கும் திறன், போதிய அளவிற்கு  பேராசிரியர்கள் உள்ளனரா என மாணவர்கள் ஓரளவிற்கு கணித்து கலந்தாய்வில் சிறந்த கல்லூரியை தேர்ந்தெடுக்க இந்த தரவரிசைப் பட்டியல்  உதவும்.

சேலம் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஹேண்ட்லூம் டெக்னாலஜி, கோவையில் பிஎஸ்ஜி இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி, நாமக்கல் விவேகானந்தா இன்ஸ்டியூட் ஆப் இன்ஜினியரிங் ஆகியவை முதல் மூன்று இடங்களை பெற்றுள்ளன.