தமிழ்நாட்டிலுள்ள 494 பொறியியல் கல்லூரிகளில் உள்ள ஒரு லட்சத்து 72 ஆயிரத்து 148 அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கையை தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நடத்துகின்றது.
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளன.
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் வருகிற 27ந்தேதி தொடங்கி, ஜூன் 10ந்தேதி முடிவடைகிறது.
கொரோனா பாதிப்பு குறைந்த பின்னரே கல்லூரிகள் திறக்கப்படும். கல்லூரிகளில் கொரோனா சிகிச்சை அளிப்பதற்கான வசதிகள் செய்யப்பட்ட நிலையில், கிருமி நாசினி தெளித்த பின்பே வகுப்புகள் தொடங்கப்படும்.
பொறியியல் படிப்புக்கு மாணவ மாணவியர் ஆன்லைன் வழியே பதிவு செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன என உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் நேற்று கூறினார்.
இந்த நிலையில், பொறியியல் படிப்புக்கான மாணவ மாணவியர் சேர்க்கைக்கு ஆன்லைன் வழியே பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
இந்த பதிவு வருகிற ஜூன் 10ந்தேதியில் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் சார்பில் தயார் செய்யப்படுகின்றன