இங்கிலாந்திற்கு எதிரான ஓவல் டெஸ்ட்: 118 ரன்னில் இந்தியா தோல்வி..

இங்கிலாந்து – இந்தியா இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

நேற்றைய நான்காவது நாள் ஆட்டத்தில் இந்தியாவின் வெற்றிக்கு 464 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து.

464 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. தவான் (1), புஜாரா (0), விராட் கோலி (0) அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் இந்தியா 2 ரன்னிற்குள் 3 விக்கெட்டை இழந்தது.

இந்த ஜோடி நிலைத்து நின்று விளையாடியது. ஆனால் ஸ்கோர் 120 ரன்னாக இருக்கும்போது ரகானே 37 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த விஹாரி ரன்ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.

6-வது விக்கெட்டுக்கு லோகேஷ் ராகுல் உடன் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் ஜோடி சேர்ந்தார். லோகேஷ் ராகுல் தனது ஐந்தாவது சதத்தை பூர்த்தி செய்தார்.

மறுமுனையில் இளம் வீரரான ரிஷப் பந்த் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

78 பந்தில் 7 பவுண்டரி, 1 சிக்சருடன் அரைசதம் அடித்த ரிஷப் பந்த், 116 பந்தில் 95 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அடில் ரஷித் பந்தை சிக்சருக்கு தூக்கி தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார்.

இவரது சதத்தில் 14 பவுண்டரி, 3 சிக்சர்கள் அடங்கும்.

இருவரின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா 2-வது செசனில் விக்கெட் இழக்கவில்லை.

லோகுஷ் ராகுல் – ரிஷப் பந்த் ஜோடி 6-வது விக்கெட்டுக்கு இதுவரை 38.2 ஓவரில் 177 ரன்கள் சேர்த்துள்ளது.

லோகேஷ் ராகுல் 142 ரன்னுடனும், ரிஷப் பந்த் 101 ரன்னுடனும் களத்தில் உள்ளன. இந்தியாவின் வெற்றிக்கு கடைசி செசனில் 166 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் இந்திய அணி 118 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெற்றி வாய்ப்பை இழந்தது.

இதன் மூலம் 5 டெஸ்ட் கொண்ட தொடர் போட்டியில் 4-1 என்ற கணக்கில் இங்கிலாந்து தொடரை வென்றது.