முக்கிய செய்திகள்

பொறியியல் மாணவர் சேர்க்கை மே 3ம் தேதி முதல் ஆன்லைன் பதிவு தொடக்கம்…


பொறியியல் படிப்பு படிக்க விரும்பும் மாணவர்கள் ஆன்லைன் மூலம் வரும் மே 3ம் தேதி முதல் 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பொறியல் படிப்பிற்கான கலந்தாய்வு குறித்த விவரங்களை அவர் அறிவித்தார்.

அதன்படி, பொறியியல் கலந்தாய்வு முதன்முறையாக ஆன்லைனில் நடக்கிறது. பொறியியல் படிப்பிற்கான விண்ணப்படும் கோருவதற்கான அறிவிப்பு இம்மாதம் 29ம் தேதி வெளியிடப்படும். விண்ணப்பதிவு ஆன்லைனிலேயே நடைபெறும் என்று அவர் தெரிவித்தார்.

தமிழகத்தில் கடந்தாண்டு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு மொத்தம் 1,52,704 இடங்கள் நிரப்பப்பட்டதாக கூறிய அமைச்சர் அன்பழகன் தற்போதைய ஆண்டிற்கான பொறியியல் படிப்பிற்கான மொத்த இடங்கள் வரும் மே 15ல் தெரியவரும் என்று அவர் கூறீனார்.