ஃபேஸ்புக்கில், பயனர்களின் தகவல்கள் மற்றவர்களுக்கு தாரைவார்க்கப்படும் சூழல் நிலவுவதாக அந்நிறுவனத்தின் இணை நிறுவனர்களுள் ஒருவர் முன்வைத்த குற்றச்சாட்டை, அந்நிறுவன சி.இ.ஓவான மார்க் ஜூக்கர்பெர்க் மறுத்துள்ளார்.
ஃபேஸ்புக் இணை நிறுவனர்களுள் ஒருவரான க்றிஸ் ஹியூக்ஸ், கடந்த 2007ஆம் ஆண்டு தனது நிர்வாக பொறுப்புகளிலிருந்து வெளியேறினார்.
இந்நிலையில், அண்மையில் ஃபேஸ்புக் பற்றி குறிப்பிட்ட அவர், மார்க் ஜூக்கர்பெர்க் அன்பான மனிதர்தான் எனவும்,
ஆனால் தனி நபர் வளர்ச்சிக்காக பயனர்களின் தகவல்களை தாரைவார்க்கும் சூழல் ஃபேஸ்புக்கில் நிலவுவதை தான் விரும்பவில்லை எனும் தொனியில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், அவரது குற்றச்சாட்டை மறுத்துள்ள மார்க் ஜூக்கர்பெர்க், பயனர்களுக்கு பாதுகாப்பு அம்சங்களை வழங்குவதற்காகவே அதிக தொகையை முதலீடு செய்துள்ள சமூக ஊடகம் ஃபேஸ்புக்தான் எனத் தெரிவித்தார்.