முகத்தில் உள்ள தழும்புகள் நீங்கி..முகம் பொலிவு பெற..

“அகத்தின் அழகு முகத்தில் தெரியும்” என்ற பழமொழிக்கேற்ப முக அழகு பெற்று பொலிவு பெறவும்,

முகத்தில் உள்ள அத்தனை தழும்புகளும் மறைந்து வெள்ளையாக மாற கற்றாழை ஜெல்லுடன் இதனை சேர்த்து பூசுங்கள்.

முகத்தில் இருக்கும் தழும்புகள், கரும்புள்ளிகள் போன்றவற்றை நீக்கி இயற்கையான அழகை எப்படி பெறுவது என்பதை பற்றித் தான்.

பெண்கள் மட்டும் இன்றி ஆண்களுக்கும் அழகாக ஆசை இருக்கும். அழகு என்பது நிறத்தை வைத்து பார்க்க முடியாது தான் ஆனாலும் இருக்கும் முகத்தை அழகாய் வைப்பதில் தவறு என்று கிடையாதே.

சிலர் அழகாக இருந்தாலும் அவர்களது முகத்தில் இருக்கும் கரும் புள்ளிகள் தழும்புகள் தான் அசிங்கப் படுத்தி விடுகிறது. இதற்கு இலகுவான அதே நேரம் இயற்கை முறையில் தீர்வு காணலாம் வாங்க..!

இதற்கு தேவையான பொருட்கள்: கற்றாலை ஜெல், சந்தனப் பவுடர், எலுமிச்சை சாறு, ஆலிவ் ஆயில். இவற்றை வைத்து இந்த டிப்ஸ் எப்படி செய்வதென பார்க்கலாம்.

முதலில் கற்றாழை ஜெல் ஓரிஜினல் உங்களிடம் இருந்தால் பயன்படுத்துங்கள். இல்லாவிட்டால் கடையில் வாங்குங்கள்.
இதில் ஒரு கரண்டி எடுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் பாதி எலுமிச்சையின் சாறு சேருங்கள். இதனுடன் ஒரு கரண்டி சந்தன பவுடர் சேருங்கள்.

ஆலிவ் ஆயில் அரை டீஸ்பூன் சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணுங்கள். இப்போது இந்த பேஸ்டை முகத்தில் அப்லே செய்யுங்கள்..
1 தொடக்கம் 5 நிமிடம் நன்றாக மசாஜ் செய்த பின் 30 நிமிடங்கள் அப்படியே விட்டு விடுங்கள்.

பின் கழுவுங்கள்.! இப்படி செய்வதன் மூலம் தழும்புகள் மறைந்து முகம் வெள்ளையாவதுடன் பாலிஸாகவும் இருக்கும்…

பதினைந்து நாட்களில் முகத்தில் உள்ள அத்தனை தழும்புகளும் மறைந்து வெள்ளையாக மாற கற்றாழை ஜெல்லுடன் இதனை சேர்த்து பூசுங்கள்.