திமுக அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளில் 70 சதவீதம் நிறைவேற்றம்; எஞ்சிய 30 சதவீதம் வாக்குறுதிகள் விரைவில் நிறைவேற்றப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கோவை கொடிசியா வளாகத்தில் பொங்கலூர் பழனிசாமி இல்ல திருமண விழாவில் பேசிய முதல்வர், என்னிடம் மக்கள் மகிழ்ச்சியோடு, நம்பிக்கையோடு மனுக்களை கொடுப்பதாக தெரிவித்தார்.
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் திட்டம் நிச்சயமாக நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். மாநிலத்தின் நிதிநிலைமையை சரிசெய்து கொண்டு இருக்கிறோம், நிதிநிலை சரியான பிறகு திட்டம் அமல்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார். அறிக்கைகளை நாங்களே வைத்துக்கொள்ள மாட்டோம்; பகிரங்கமாக நாங்களே பொதுவெளியில் வெளியிடுவோம். விசாரணை அறிக்கையை சட்டமன்றத்தில் வைத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.