
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கல்லலில் தனது ரசிகரின் இல்ல புதுமனை புகுவிழாவிற்கு வருகை தந்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார் நடிகர் கார்த்தி.

சிவகங்கை மாவட்டத்தில் படப்பிடிப்பில் இருந்த கார்த்தி தனது தீவிர ரசிகரும், சிவகங்கை மாவட்ட ரசிகர் மன்ற பொருளாளருமான விஜயேந்திரன்- இந்து அபிநயா தம்பதியினரின் ”சௌந்தர்யம்” இல்ல புதுமனை புகுவிழா அழைப்பிதழை படப்பிடிப்பின் போது கொடுத்துள்ளார்.

அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் நடிகர் கார்த்தி அவரின் இல்ல புதுமனை புகுவிழாவிற்கு சென்றார். அவரின் வருகையால் அந்த வட்டாரப் பகுதிகளில் ஏராளமான ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அவரைப் பார்க்க கூடி விட்டனர்.
நடிகர் கார்த்தி ரசிகரின் இல்ல புதுமனை புகுவிழாவிற்கு செல்வது இதுவே முதல் முறை என்கின்றனர் சிவகங்கை மாவட்ட கார்த்தி ரசிகர்கள்.